தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பத்து நாட்களாகியும் நடிகர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.
அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எப்போதும் நான் துணையாக இருப்பேன் என்று உறுதி கொடுத்ததோடு புகைப்படமோ வீடியோவோ எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பிறகு விரைவில் நடிகர் விஜய் அறிவித்த 20 லட்ச ரூபாய் நிவாரண உதவியும் அவர் வழங்க இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் என்ற உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் நடிகர் விஜய் எந்த நேரமும் கரூர் செல்லலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் ஜாமின் கிடைக்காவிட்டால் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.
