சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஜெனரேஷன் Z-இன் வேலை நேர அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. kad_shatakshi என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சதக்ஷி பாண்டே என்ற பெண் ஊழியர், தனது முதலாளியிடம் சொன்ன துணிச்சலான பதில், நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீடியோவில், சதக்ஷி பாண்டே, “எனது அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதால், இன்று நேரம் தவறாமல் வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்று முதலாளியிடம் கூறுகிறார். அதற்கு முதலாளி, “நான் நேற்று இரவு முதல் ரயிலில் பயணம் செய்து, காலை 7 மணிக்கு இறங்கி 7.30 மணிக்கே அலுவலகம் வந்தேன், இப்போது மாலை 6 மணி ஆனாலும் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்” என்று கூறி, சிறிது நேரம் தங்குமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால் சதக்ஷி, “இன்று நான் நேரத்தில் வீட்டிற்குச் செல்வேன்” என்று உறுதியாக மறுத்துவிட, இறுதியில் முதலாளி “சரி, நீங்கள் போகலாம்” என அனுமதிக்கிறார்.
View this post on Instagram
“>
இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று, பலர் கருத்துப் பிரிவில் சதக்ஷியின் நேர்மையான பதிலைப் பாராட்டியுள்ளனர். “நாம் முதலாளியிடம் இப்படி ஒரு பதிலைச் சொன்னால் நல்லது”, “ஷிப்ட் முடிந்ததும் ஜெனரேஷன் Zக்கு முதலாளி யார் என்பதே தெரியாது”, “முதலாளிக்கு சரியான பதிலை அளித்துள்ளார்” போன்ற பதிவுகள் அதிகம் வந்துள்ளன.
இந்த சம்பவம், வேலை நேர எல்லைகளுக்கு மதிப்பு அளிக்கும் புதிய தலைமுறை மனப்போக்கை தெளிவாக வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
