சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பொதுச்சாலையில் ஆபத்தான ஸ்டண்ட் செய்வது எவ்வளவு அபாயகரம் என்பதை வெளிப்படுத்துகிறது.
சாலையின் நடுவில் பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்ற இளைஞர், திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பைக் ஓரமாகச் சென்று, அங்கே நின்றிருந்த ஒரு குழந்தை மீது மோதுகிறது. தாக்கத்தின் வேகத்தில் பைக்கும் குழந்தையும் அருகிலிருந்த வயல்வெளிக்குள் விழும் காட்சி பதிவாகியுள்ளது. சம்பவத்தின் இடம் மற்றும் நேரம் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், வீடியோவில் பல குழந்தைகள் சாலையோரத்தில் நின்று ஸ்டண்ட் பார்த்துக்கொண்டிருப்பது காணப்படுகிறது.
வீடியோவில், பைக் ஓட்டிய இளைஞர், ஓடியுகொண்டிருக்கும் பைக்கில் நின்று ஸ்டண்ட் செய்யும் போதே, அதை இன்னும் ஆபத்தானதாக மாற்றுவதற்காக பைக்கின் மேல் குதிக்க முயல்கிறார். அப்போது கட்டுப்பாடு தவறி பைக் சாலையோரம் திரும்பி, அங்கு இருந்த குழந்தையை நேரடியாக மோதுகிறது. குழந்தையின் காய நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பொதுச்சாலையில் இப்படியான ஆபத்தான ஸ்டண்ட்கள் தன்னையும், பிறரையும் பாதிக்கக் கூடும் என்பதால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Humla Aachanak hua pic.twitter.com/LNzkdeoNhK
— Bhoomika Maheshwari (@sankii_memer) August 4, 2025
“>
இந்த வீடியோ X தளத்தில் @sankii_memer என்ற கணக்கில் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வைகள் மற்றும் நூற்றுக்கணக்கான கருத்துகளைப் பெற்றுள்ளது. “யோசிக்காமல் எங்கும் ஸ்டண்ட் செய்யக்கூடாது”, “சாலையில் ஸ்டண்ட் செய்வது பிறரை ஆபத்தில் ஆழ்த்தும்” போன்ற விமர்சனங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. மேலும், பாதுகாப்பு உபகரணங்களுடன், மூடப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் மட்டுமே ஸ்டண்ட் செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
