தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த சித்தாரெட்டியின் மனைவி கவிதா, கடந்த 27-ஆம் தேதி தனது கள்ளக்காதலன் பவன் ரெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து சித்தாரெட்டி போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் கவிதாவையும் அவரது கள்ளக்காதலனையும் மீட்டனர். அவர்களை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது, அங்கு வந்திருந்த சித்தாரெட்டி ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவிதாவைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.
போலீசாரின் கண்முன்னே நடந்த இந்தத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கவிதா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்காதல் விவகாரத்தால் ஒரு குடும்பமே சிதைந்து போனது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொலை செய்த சித்தாரெட்டியை போலீசார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு நிமிடம் நிதானம் இழந்ததால் ஒரு உயிர் போனதோடு, கணவனும் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
