ஜெயலலிதா மறைந்த அன்றைய இரவே அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் தன்னை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வற்புறுத்தியதாகச் சசிகலா ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். “அக்கா இறந்த துக்கத்தில் இருந்ததால் எனக்கு அந்த எண்ணம் இல்லை. அதனால்தான் பன்னீர்செல்வத்தை அழைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் சொன்னேன்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஓபிஎஸ் முதல்வரான ஒரு வாரத்திலேயே அவர் மீது புகார்களை அடுக்கத் தொடங்கிய ஒரு கும்பல், அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டித் தன்னை பொதுச்செயலாளராக நியமித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ்-ஸின் பதவி ஏற்பு முதல் தான் பொதுச்செயலாளர் ஆனது வரை நடந்த அனைத்துமே மற்றவர்களின் வற்புறுத்தலால்தான் நடந்தது என்பதைச் சசிகலா இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இது அதிமுக-வின் தற்போதைய அதிகாரப் போட்டியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
