இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் தானும் நேரடியாகப் போட்டியிடப் போவதாகச் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு படையை வழிநடத்திச் செல்பவர்கள் வெறும் உத்தரவு மட்டும் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது; அவர்களும் போர்க்களத்தில் (தேர்தல் களம்) நேரடியாக இருக்க வேண்டும்” எனத் தனது முடிவிற்கான காரணத்தை விளக்கினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் சீமான் நேரடியாகத் தேர்தலில் குதிப்பது, அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026-ல் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கப் போவதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
