தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 1.13 கோடி பெண்கள் மாதம் ₹1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நிபந்தனைகளால், தகுதியிருந்தும் பல லட்சம் பெண்களுக்கு இந்தத் தொகை கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நிலவி வருகிறது. இந்நிலையில், தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு இந்த நிபந்தனைகளைத் தளர்த்த திமுக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டால், கூடுதலாக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. விடுபட்டவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்குவதன் மூலம் பொதுமக்களின் ஆதரவைத் தக்கவைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.