நாட்டையே உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளிவருகிறது. அதாவது மகராஷ்டிரா மாநிலம் மலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட ஒரு சிறிய குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் நூறுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த வழக்கில் இந்து வலது சாரி அமைப்புகளுடன் தொடர்புடைய ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கணக்கு 2011 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்ட நிலையில் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்பி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும் இஸ்லாமிய பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும்  ATS குற்றம் சாட்டியது.

இதேபோன்று முன்னாள் ராணுவ அதிகாரி மீது அபிநவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு வெடிபொருட்கள் மற்றும் ஆதரவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக இவர்கள் இருவர் உட்பட மொத்தம் ஏழு பேர் மீது குற்ற பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்துள்ளது.

மேலும் இதன் காரணமாக இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. மேலும் 17 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி ஏ.கேலஹோட்டி தீர்ப்பு வழங்க இருக்கிறார்.