கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு 5 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் தன் வீட்டின் முன்பாக சில சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த சிறுவர்களுக்கு இன்னும் 18 வயது கூட நிரம்பவில்லை. இந்த நிலையில் சிறுவர்கள் திடீரென சிறுமியை ஒரு மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறிய நிலையில் குழந்தையை அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
