இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் ரயிலில் சவுகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். அதே சமயம் பயணிகளின் வசதிக்காகவும் இந்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள் வைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் எளிதில் அடையாளம் காணும் வகையில் எளிமையான வார்த்தைகள் மற்றும் எழுத்தின் அளவு என ஒரே மாதிரியாக இருக்கும் புதிய பெயர் பலகைகள் வைக்கப்படும் என கூறியுள்ளார்