கர்நாடகாவில் கடந்த மே பத்தாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் சமூக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தேர்தலில் வென்ற காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டி கே சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரர் மற்றும் முன்னாள் அமைச்சர் பாட்டில் ஆகியோர் முதல்வர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர் .

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை முதல்வராக வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது. இதனைத் தொடர்ந்துகர்நாடக முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மல்லிகார்ஜூன் கார்கேவிடம் எம்எல்ஏக்கள் குழு ஒப்படைத்துள்ளது. மேலும் வருகின்ற மே 18ஆம் தேதி வியாழக்கிழமை முதல்வர் பதவியேற்பு விழாவை நடத்த நல்ல நாளாக இருக்கிறதாம். அன்றைய தினம் பதவியேற்பு விழா நடத்தியே ஆக வேண்டும் என்று தலைமை முடிவு செய்துள்ளது. அதனால் இன்று அல்லது நாளை முதல்வர் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.