இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் மொபைல் சிம் கார்டு களுக்கான புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய நோக்கம் ஆன்லைன் மோசடி மற்றும் ஹேக்கிங் செய்பவர்களை தடுப்பது தான் என டிராய் தெரிவித்துள்ளது.

தொடர்பு பட்டியலில் பெயர் சேமிக்கப்பட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மொபைல் பயனரின் கைப்பேசியில் ஒவ்வொரு உள்வரும் அழைப்புகளின் பெயரும் காட்டப்படும் புதிய சேவையை தொடங்குவதற்கு தொலைதொடர்பு துறைக்கு டிராய் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலமாக மோசடி சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.