உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்புக்குப் பிறகு எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்கடந்த சில  தினங்களுக்கு முன் சமர்பித்தது. அதில் யார் யார் எந்த கட்சிக்கு எந்த தேதியில் எந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரம் இல்லை. தேர்தல் பத்திரங்களுக்கான சீரியல் எண்ணும் அதில் இடம்பெறவில்லை.

எஸ்பிஐ கொடுத்திருக்கும் தேர்தல் பத்திர விவரங்களின்படி, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்று கூறியது உச்சநீதிமன்றம். இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். மறைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் SBI வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.