ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவை தேர்தலில் போட்டியிட கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தமிழிசை ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் தமிழிசை. இன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து சென்னை வருகிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் கனி மொழியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார் தமிழிசை சௌந்தரராஜன். தமிழிசை கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2021 பிப்ரவரி 16ஆம் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் தமிழ்சைக்கு வழங்கப்பட்டது. மக்களவை தேர்தலில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை அல்லது புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.