இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைவாக பயணிக்க ஏதுவாக மத்திய அரசு வந்தே பாரத் ரயில் திட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதன் மூலம் நவீன வசதிகளுடன் குறைவான நேரத்தில் மக்கள் பயணிக்க முடியும். இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன.

இருந்தாலும் வந்தே பாரத் ரயிலின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் சாதாரண மக்கள் அணுக முடியாத நிலை இருப்பதாகவும் பல கருத்துக்கள் எழுந்துள்ளது. இதனை கருதி கடந்த நவம்பர் மாதம் அம்ரித் வந்தே பாரத் ரயில் திட்டத்தை ரயில்வே வாரியம் தொடங்கியது. இந்த திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அம்ரித் பாரத் ரயில்களின் இயக்கத்தை அதிகரிப்பதற்காக 492 ரயில்வே பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக 2024-25 ஆம் ஆண்டில் புதிதாக 50 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.