NEET UG 2024 விண்ணப்பங்களை திருத்த NTA வாய்ப்பளித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். இதுவே கடைசி வாய்ப்பு என்றும் அதன் பிறகு எடிட் ஆப்சன் வழங்கப்பட மாட்டாது என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது. இந்த தேர்வு மே 5ம் தேதி ஆப்லைன் முறையில் நடத்தப்படும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 8ம் தேதியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.