
பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் சீமா. இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சீமா தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது சீமா 15 வயது சிறுவனை திருமணம் செய்துள்ளார். வழக்கத்திற்கு மாறான இந்த திருமணம் குறித்து நிருபர் ஒருவர் சீமாவிடம் கேள்வி எழுப்பிய போது அவர் தைரியமாக “நாங்கள் காதலித்தோம் திருமணம் செய்து கொண்டோம், இதில் என்ன தவறு” என்று கேட்டுள்ளார்.