சென்னை: தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் அதைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என அக்கட்சியின் அமைச்சரான மருத்துவர் கே.ஜி.அருண்ராஜ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெகவினராகிய எங்களுக்குத் தேர்தலைச் சந்திக்க அதிகளவில் பணம் தேவையில்லை என்றும், மக்கள் எங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்றும் பெருமிதத்துடன் கூறினார். மேலும், “நாங்கள் எப்போதுமே ரெடி, ஆனால் தேர்தல் வந்தால் அதைச் சந்திக்கத் தற்போதைய எதிர்க்கட்சியான திமுக தயாராக இருக்கிறதா?” என ஓப்பனாக சவால் விடுத்துள்ளார்.
#WATCH | ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்தால் தேர்தலை சந்திக்க தவெக தயார்..திமுக தயாரா? அமைச்சர் அருண்ராஜ் கேள்வி#arunraj #reelection #News18TamilNadu pic.twitter.com/8NVgK6lPgc
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 9, 2026
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தவெக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், திமுகவிற்கு அமைச்சர் அருண்ராஜ் விடுத்துள்ள இந்த நேரடி அரசியல் சவால் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் ஆகியுள்ளது.
