சவுக்கு மீடியா நிறுவனரும், பிரபல ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசியல் வட்டாரத்தை உலுக்கும் வகையிலான அதிரடித் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மெஜாரிட்டிக்கு 8 அல்லது 9 இடங்கள் குறைந்த சூழலில், அக்கட்சிக்கு ஆதரவு தந்து கூட்டணியில் அமைச்சரவை பங்கைக் கேட்க அதிமுகவின் மூத்த தலைவர்களான வேலுமணி, தங்கமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, தவெக தரப்பின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அரசியலுக்குப் புதியதான தவெக, அதிமுக கேட்கும் 15 அமைச்சரவைகளைத் தர ஒப்புக்கொண்டதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த 15 அமைச்சரவை ஒப்பந்தத்துடன் வேலுமணியும், சண்முகமும் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்று, “கட்சியைக் காப்பாற்ற அரசாங்கத்தை அமைக்கலாம்” என்று கூறியுள்ளனர். ஆனால், இபிஎஸ்ஸோ, “அதெல்லாம் வேண்டாம் தம்பி, திமுக நமக்கு ரகசியமாகச் சப்போர்ட் தருகிறார்கள், பொறுமையாக இருங்கள்” என்று கூறி மறுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூத்த தலைவர்கள், “அண்ணே, திமுக ஆதரவில் நாம் ஆட்சி அமைத்தால் அம்மாவின் ஆவி நம்மைக் மன்னிக்காது; பொதுமக்களும் வீதியில் இறங்கிக் கல்லால் அடிப்பார்கள்” என்று இபிஎஸ்ஸின் முகத்திற்கு நேராகவே ஆக்ரோஷமாக எதிர்த்ததாகச் சவுக்கு சங்கர் அந்தப் பேட்டியில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
