
நாங்கள் பாஜகவின் பி டீம் இல்லை என்பது என்ஐஏ சோதனை மூலம் நிரூபணம் ஆகி உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சிக்கு நடிகர் விஜய்யின் கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது. திராவிடம் என்பது தற்போது தேவையில்லாத ஒன்று.
அதைக் கடந்து தேசிய அரசியல் வளர்ந்து விட்டது என கூறியுள்ளார். அதாவது நேற்று முன்தினம் நாதக நிர்வாகிகள் பலரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.