லடாக் பகுதியிலுள்ள மிக முக்கியமான பாதுகாப்புச் சோதனைச் சாவடியில், 5 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், பாதுகாப்புப் படையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
லடாக்கின் மினிமார்க் சோதனைச் சாவதியில் பாதுகாப்புப் பணிகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் சுமார் ஐந்து மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சத்தம்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வைரலாகும் அந்த வீடியோவில், “காஷ்மீர் மக்களிடம் இதைச் செய்கிறீர்கள், இப்போது சுற்றுலாப் பயணிகளிடமும் செய்கிறீர்கள். நாங்கள் ஜென் இசட் இதையெல்லாம் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்று அந்தப் பெண் ஆக்ரோமாகக் கூறுவது பதிவாகியுள்ளது. மேலும், இந்தப் பிரச்சினையைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா இளைய தலைமுறையினர் தங்களது அடையாளத்தை ஒரு மிரட்டலாகப் பயன்படுத்துவதைக் கண்டித்துள்ளார். “முன்பெல்லாம் ‘என் அப்பா யார் தெரியுமா?’ என்று மிரட்டுவார்கள்; இப்போது அது ‘நாங்கள் ஜென் இசட்’ என்று மாறியுள்ளது. சிறிய விஷயங்களுக்குக்கூட இதைப் பயன்படுத்துவது இளைஞர்கள் மீதான நன்மதிப்பைக் குலைத்துவிடும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
We are Gen-Z and we won’t tolerate this nonsense. Kashmiriyo ke sath toh karte hi the ab tourist ke sath bhi karne lagye. pic.twitter.com/7aluOiFUjJ
— DesiEsco🇮🇳 (@DesiEsco7) August 19, 2026
“>
உணர்ச்சிகரமான மற்றும் எல்லைக்குட்பட்ட பாதுகாப்புப் பகுதிகளில் இயங்கும் பாதுகாப்புப் படையினரின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ளாமல் சுற்றுலாப் பயணிகள் இதுபோன்று நடந்து கொள்வது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்புகளுக்கு இடையேயான மோதலை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
