வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், “தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான் நடக்கிறது” என்று கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய செயலாளர் மாமூல் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் கிராம மக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
தவெகவினர் தங்களை மாதாமாதம் பணம் தருமாறு கட்டாயப்படுத்தி மிரட்டுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு தவெக நிர்வாகி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக நடக்கும் மண் திருட்டைத் தடுக்கவும், கனிம வளங்களைப் பாதுகாக்கவும் தாங்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததால், ஆத்திரமடைந்து வேண்டுமென்றே தங்கள் மீது திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த இருதரப்பு மோதலால் அந்தப் பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
