நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலை சந்திப்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
தனது உரையின் போது, நாகை மாவட்டத்தில் அரசின் பணி குறித்தும், எதிர்கால தேவைகள் பற்றியும் பல கேள்விகளை எழுப்பினார்.
அவர் உரையில் முக்கியமாகக் கூறியவை
* மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?
* நாகை மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி, வேதாரண்யம் உப்பு ஏற்றுமதியை வளர்த்தெடுக்கவில்லையே ஏன்?
* நாகையில் மூடப்பட்ட ரெயில் பெட்டி தொழிற்சாலையை திறந்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். * தஞ்சை, நாகை சாலை பணிகள் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது, அதை ஏன் முடிக்கவில்லை.
* நெல் மூட்டைகள் பல ஆண்டுகளாக மழையில் நனையும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுத்தீர்களா? * உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சந்திக்க வர வேண்டும் என்பதற்காக தான் சனிக்கிழமையில் வருகிறேன்.
* அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வுநாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.
* அதை பேசாதீர்கள், இதை பேசாதீர்கள் என்றால் நான் எதைத்தான் பேசுவது?
* பேருந்துக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே… மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள்.
* என் சொந்த மக்களை சந்திக்க எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள். நான் தனியாள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
