மனிதர்களுக்கு நீண்ட காலமாகவே மர்மமாகவே இருந்து வரும் ஏலியன்கள் உண்மையில் உள்ளனவா? என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் மாதத்தில் பூமியை நோக்கி வருகின்ற மர்ம விண்வெளி பொருள் தான் அந்த சந்தேகத்திற்கு காரணம்.
ஹார்வர்டு பல்கலைக்கழக வானியற்பியல் பிரிவில் பணியாற்றும் அவி லோயப் என்பவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, இந்த மர்ம பொருளை 3I/அட்லஸ் எனப் பெயரிட்டுள்ளனர். இது சுமார் 10 முதல் 20 கி.மீ. அகலம் கொண்டது. விநாடிக்கு 60 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருகிறது.
இது சூரியனை நெருங்கும் நேரத்தில் பூமியில் இருந்து காண முடியாத நிலையில் இருக்கும். பின்னர் டிசம்பர் தொடக்கத்தில், சூரியனின் மறுபுறம் இருந்து அது மீண்டும் தெரியத் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த மர்ம பொருள் 700 கோடி ஆண்டுகள் பழமையானது, இது சூரிய மண்டலத்தை விடவும் மூத்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது மணிக்கு 2.45 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருக்கலாம்.
இந்த பொருள், ஏலியன்களின் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கலாம், அதாவது இது மனிதர்களுக்குத் தெரியாத advanced technology-யால் இயக்கப்படுகிற செயற்கை அமைப்பு என்றும், அது பூமியை தாக்கக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
சிலி நாட்டின் ரியோ ஹர்டாடோ பகுதியில் உள்ள தொலைநோக்கி மூலமாக முதன்முறையாக இந்த மர்ம பொருள் கண்டறியப்பட்டது. விஞ்ஞானிகள் இதுபற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இது உண்மையென்றால், மனித இனத்தின் பாதுகாப்பு, வானியல் அமைப்புகள், தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்த மர்ம பொருள் உண்மையிலேயே ஏலியன்களின் முயற்சி என்றால், அதன் செயல்பாடுகள் நவம்பர் மாதத்துக்குள் என்னவாக இருக்கும்? பூமிக்குத் தீங்கு ஏற்படுத்துமா? என உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் மட்டுமல்ல, பொது மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
