
பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கோரமங்கலா பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட அவர் பின் வீடு திரும்பினார். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு பைக்கில் சென்ற நபரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அந்த புகாரின் படி காவல்துறையின வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.