கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் 15 வயது சிறுமி வசித்து வந்தார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பின்வாசல் வழியாக சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். அதன் பிறகு அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. அதே நாளில் பக்கத்து வீட்டில் வசித்த ஆட்டோ ஓட்டுனரான பிரதிபின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.
இதனால் சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாயமான சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமி மற்றும் பிரதீப்பின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் வனப்பகுதியில் தேடி பார்த்தனர். அப்போது எந்த தடயமும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்த மரத்தில் சிறுமியும் பிரதீப்பும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் சிறுமியின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
