நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார்.

இந்நிலையில் நல்ல மதிப்பெண் எடுத்து படிக்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு நடிகர் விஷால் ‘தேவி அறக்கட்டடளை மூலம் ‘ உதவி வருகிறார். உதவி தேவைப்படுவோர் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தகவலை அனுப்பி வைக்குமாறு விஷால் மக்கள் நல இயக்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அனுப்பப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மேற்படிப்பிற்கு உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.