இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ₹1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவருடைய அதிரடியான பேட்டிங் திறமையைக் கண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறிப்பாக, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன், வைபவ்வின் ஆட்டத்தை நேரடிப் பயிற்சியின் போது கவனித்த பிறகு, நகைச்சுவையாகவும் வியப்பாகவும் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். வைபவ்வின் அசாத்தியமான பேட்டிங் திறமையைக் கண்ட முரளிதரன், “கடவுளுக்கு நன்றி, நான் இப்போது விளையாடவில்லை, என் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்கனவே முடிந்துவிட்டது” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 15 வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியான மற்றும் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு வீரருக்குப் பந்துவீசுவது மிகவும் கடினம் என்பதை முரளிதரன் இதன் மூலம் உணர்த்தியுள்ளார். “நான் விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் இவரைப் போன்ற வீரர்கள் இருந்திருந்தால், என் நிலைமை என்னவாகியிருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை” என முரளிதரன் பாராட்டியுள்ளது, வைபவ் சூர்யவன்ஷியின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.