தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அதிரடித் திருப்பங்களால் தினமும் பரபரப்பாகி வரும் வேளையில், திமுகவிலிருந்து விலகி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முக்கிய நிர்வாகியான டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் திமுக தலைமைக்கு எதிராக வெடி வைத்தாற்போல் பேசியுள்ள கருத்துக்கள் அறிவாலய வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

திமுகவின் தேர்தல் தோல்வி குறித்து ஆராய 36 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை மு.க. ஸ்டாலின் அமைத்துள்ள நிலையில், அதுகுறித்து காரசாரமாக விமர்சித்துள்ள சண்முகசுந்தரம், “திமுக நல்லவங்களை எல்லாம் ஏற்கனவே கை விட்டுடுச்சி.. கட்சிக்காக உண்மையாக, நன்றாக பணியாற்றியவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, இப்போ போய் தோற்றதுக்கு அப்புறம் தொகுதி வாரியாக ஆய்வு செய்து என்ன பலன் கிடைக்கப் போகிறது?” என்று மிக ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சிக்குள் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத ஏமாற்றமே தங்களை போன்றவர்களை தவெக நோக்கிப் படையெடுக்க வைத்துள்ளதாக அவர் உருகிப் பேசியுள்ள நிலையில், திமுகவிலிருந்து விலகிய ஒரு சீனியர் நிர்வாகியின் இந்த ஓப்பனான குமுறல் பேட்டி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.

“>