தமிழக அரசியல் களத்தில் புதிய தவெக அரசின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிரடி விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது.

“எடப்பாடி பழனிசாமியின் சுயநலப் போக்கால் அதிமுக முற்றிலும் வலுவிழந்து தரைமட்டமாகிப் போயிருக்கிறது; கட்சியில் தான் ஒருவர் மட்டும் பவர்ஃபுல்லாக இருந்தால் போதும் என்று அவர் நினைக்கிறார்” என மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அதிமுகவுக்குள் நிலவும் இந்த ஒற்றையாட்சி மற்றும் சர்வாதிகாரப் போக்கை வரும் நாட்களில் தங்களது அதிரடி நகர்வுகள் மூலம் ‘நிச்சயம் மாற்றிக் காட்டுவோம்’ என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். தவெக அமைச்சரவையில் கஜானாவை நிர்வகிக்கும் பவர்ஃபுல் பொறுப்பைப் பெற்ற கையோடு, அதிமுகவின் மூத்த முன்னாள் தலைவரான செங்கோட்டையன் இபிஎஸ்-ஸை குறிவைத்து இப்படி ஓப்பனாகப் பாய்ந்திருப்பது, இபிஎஸ் கூடாரத்தை நிலைகுலைய வைத்துள்ளதோடு, சோசியல் மீடியாவிலும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.

“>