சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,12,240 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 15,305 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,22,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு இருபது ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
