மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மரகதம் குமரவேல். அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவினால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த இவர், கடந்த 25-ம் தேதி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் இணைந்தார்.

இவரது இந்த திடீர் முடிவு அ.தி.மு.க தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மரகதம் குமரவேலின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுராந்தகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க தொண்டர்கள் அவரது உருவப்படத்தை வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது தொகுதி முழுவதும் அவருக்கு எதிராகப் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டர்களில் “நன்றி மறந்தவர், துரோகம் செய்தவர்” போன்ற கடுமையான வாசகங்கள் இடம்பெற்றுள்ளதால், மதுராந்தகம் தொகுதி முழுவதும் தற்போது பெரும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.