தமிழக முதலமைச்சர் விஜய் தனது டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்காதது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு விளக்கம் அளித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி அளித்துள்ளார்.
நேற்று ராகுல் காந்திக்கு போதிய நேரம் இல்லாத காரணத்தினாலேயே இந்தச் சந்திப்பு சாத்தியப்படாமல் போயிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை என்றும், அடுத்த முறை முதலமைச்சர் விஜய் டெல்லிக்குச் செல்லும்போது கண்டிப்பாக ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசுவார் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
