தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் பிளவு வெடித்துள்ளது. இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“தேர்தலில் ஜெயித்த பிறகு முதலமைச்சரை நேரில் சந்தித்து ஒரு நன்றி கூட சொல்லாமல், இக்கட்டான நேரத்தில் முதுகில் குத்திவிட்டு ஓடிவிட்டார்கள்” என காங்கிரஸ் கட்சியை திமுக எம்.எல்.ஏ-க்கள் ஒருமையில் விளாசாத குறையாகத் தீர்த்துக்கட்டியுள்ளனர். இத்தனை காலமும் “கை” கோர்த்து நடந்தவர்கள், இப்போது “கை” கழுவிவிட்டுப் போனது அறிவாலய வட்டாரத்தை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. “நாங்க இவ்வளவு பெருந்தன்மையா இருந்தும் இப்படி துரோகம் பண்ணிட்டீங்களே!” என திமுக தரப்பு எகிறி வருவதால், தமிழக அரசியல் களம் இப்போது ரணகளமாக மாறியிருக்கிறது.
