நத்திங் நிறுவனம் வருகிற ஜூலை 11 ஆம் தேதியன்று இந்தியாவில் நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் பின்னர் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வருமென்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்கு துவங்கும் என்று நத்திங் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிய ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பதிவு சலுகை விவரங்கள்:

நத்திங் இயர் ஸ்டிக் மாடலின் ஸ்டாக் இருக்கும் வரை 50 சதவீதம் தள்ளுபடி.

நத்திங் அக்சஸரீ பேக்கேஜுக்கு 50 சதவீதம் தள்ளுபடி.

முன்னணி வங்கிகள் வழங்கும் உடனடி கேஷ்பேக் பலன்கள்.