அமேசான் தன் பிரைம் டே விற்பனையை(Amazon Prime Day sale) அறிவித்திருக்கிறது. இந்தியாவில் இவ்விற்பனை ஜூலை 15-16 தேதிகளில் நடைபெறும் என்று அமேசான் நிறுவனமானது தெரிவித்துள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன்கள், உபகரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், அணியக்கூடிய பொருட்கள், ஆடைகள் மற்றும் பிற பொருட்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பெறுவர்.

வங்கி சலுகைகளை பொறுத்தவரையிலும் அமேசான் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட்/டெபிட் கார்டுகள், sbi கிரெடிட் கார்டுகள், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதில் 10% சேமிப்புகளை அறிவித்துள்ளது. வர இருக்கும் விற்பனையின்போது வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி, ஆப்பிள் ஐபோன் 14, சாம்சங் கேலக்சி எஸ்20 எஃப்இ, ஐக்யூ00 11 5ஜி, ரெட்மி 12சி, சாம்சங் கேலக்சி எம்33 5ஜி, ரியல்மீ நார்ஸோ என்53, ஒன்பிளஸ் 11 5ஜி போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும் என அமேசான் விற்பனை முன்னோட்டப் பக்கம் வெளிப்படுத்துகிறது