திருவள்ளூர் மாவட்டம், அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த விமல், ஆரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், விமலின் நண்பர்களான சிவா, விக்கி, விஜி, பிரவீன், லட்சுமிகாந்தன் ஆகியோரை காவல்துறை கைது செய்து விசாரித்தது. இதில், விமல், சிவாவின் மனைவியுடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சிவா, தனது நண்பர்களின் உதவியுடன் விமலை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து, பின்னர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்தத் திடுக்கிடும் தகவல்கள் வெளியான பிறகு, காவல்துறையினர் ஐந்து பேரையும் கைது செய்தனர். இந்தக் கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
