மங்களூருவின் பஜ்பே பகுதியில் பஜ்ரங் தள செயற்திட்டங்களுடன் தொடர்புடைய ஹிந்து தலையங்கம் அமைப்பின் செயற்பாட்டாளரான சுஹாஸ் ஷெட்டி மே 1ஆம் தேதி கொடூரமாக கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் அவர் பயணித்த கார் மீது  மோதியபின், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி அவரை கொலை செய்தனர். இந்த சம்பவம் மத்திய கடலோர கன்னட மாவட்டத்தில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையுடன் தொடர்புடைய வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

https://x.com/MeghUpdates/status/1918005642159132864?t=Fa2sNx1MqLr7IdOHSO7Drg&s=19

இந்த சம்பவத்தின் எதிரொலியாக , மங்களூரு மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால் மே 2 முதல் மே 6 வரை நகரத்தில் தடுப்புச் சட்டத்தை (BNSS பிரிவு 163) அமல்படுத்தினார். அதாவது பொதுக்கூட்டங்கள், பேரணிகள், சமூக ஊடகங்களில் தூண்டுதலான பதிவுகள் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.