மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவு வாயிலிருந்து எலிபெண்டா தீவுக்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படத்தின் மீது கடற்படை படகு மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் பயணிகள் படகு கவிழ்ந்தது. அதாவது அந்த கடலில் இந்திய கடற்படை பயிற்சி கப்பல் பயிற்சி ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அந்த பயணிகளின் படகு மீது மோதியது. இந்த விபத்தில் படகு கவர்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மொத்தம் 16 பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில் 101 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து இந்திய கடலோர ‌ படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ்  தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.