மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு வருடம் ஆக இரு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்த கலவரத்தின் போது கடந்த வருடம் மே மாதம் ஒரு பெண் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் தங்களுடைய வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இடையில் வன்முறை ஓய்ந்த நிலையில் கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதால் மீண்டும் வன்முறை அரங்கேறியுள்ளது. அங்கு  பதுங்கியுள்ள  கிளர்ச்சியாளர்களை பிடிப்பதற்காக பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கெய்ராவ் குனூ என்ற பகுதி உள்ளது.

இங்கு இந்திய ராணுவத்தினர் நடத்திய சோதனையில் பல ஆயுதங்கள் சிக்கியது. அந்த ஆயுதங்களின் புகைப்படங்களை தற்போது இந்திய ராணுவத்தினர் வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஸ்டார்லிங் நிறுவனத்தின் முத்திரை பதித்த ஆயுதம் ஒன்று இருப்பதாக ஒரு எக்ஸ்  பயனர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கை கோள்கள் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தற்போது எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். அதில் இது ஒரு பொய்யானது. இந்தியாவின் மேல் ஸ்டார்லிங் செயற்கை கோள்கள் செயல்படாது என்று கூறியுள்ளார். அதாவது இந்தியாவின் மேல் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் செயல்பட உரிமம் கிடையாது. மேலும் இப்படி இருக்கையில் கிளர்ச்சிசியாளர்களுக்கு இதுபோன்ற நவீன ஆயுதங்கள் எப்படி கிடைத்தது என்பது மர்மமான புதிராக இருக்கிறது.