நடிகை பூஜா ஹெக்டேவின் பாட்டி காலமானார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், பூஜாவின் பாட்டி காலமாகியுள்ளார்.

இதனை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது பாட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘வில் மிஸ் யூ அஜி’ என்று பதிவிட்டுள்ளார்.