தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கலைமாமணி’ விருதுகள் பெறும் கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுடன், தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர்:
திரைப்பட இயக்குநருக்கான விருது – லிங்குசாமி
நடிகருக்கான விருது – எஸ்ஜே சூர்யா
நடிகைக்கான விருது – சாய்பல்லவி
நாடக நடிகருக்கான விருது – பூச்சி முருகன்
2022-ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர்:
நடிகைக்கான விருது – ஜெயா
நடிகருக்கான விருது – விக்ரம் பிரபு
பாடலாசிரியருக்கான விருது – விவேகா
2023-ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர்:
திரைப்பட நடிகர் – மணிகண்டன்
குணசித்திர நடிகர் – ஜார்ஜ் மரியான்
இசையமைப்பாளர் – அனிருத்
நடன இயக்குநர் – சாண்டி
பின்னணி பாடகி – ஸ்வேதா மோகன்
பிற சிறப்பு விருதுகள்:
பாரதியார் விருது – முருகேச பாண்டியன்
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது – யேசுதாஸ்
பால சரஸ்வதி விருது – முத்து கண்ணம்மாள்மேலும், எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர் எஸ். சந்திரசேகர் ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
