ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடல் நலக்குறைவின் காரணமாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கடுமையான வயிற்று வலியின் காரணமாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போதும் அவருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனை காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோவைக்கு கட்சி பணிகளுக்காக சென்ற அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.