இயக்குனர் ஏ.எஸ் ரவிக்குமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ்தருண் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் திரகபாதர சாமி இந்த படத்தின் ராஜ் தருணுக்கு  ஜோடியாக மன்னார சோப்ரா என்ற நடிகை நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவானது சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் தில் ராஜு கலந்துகொண்டு டீசரை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொழுது நடிகை மன்னாரா சோப்ரா பக்கத்தில் இயக்குனர் ஏ எஸ் ரவிக்குமார் சவுத்ரி நின்று கொண்டிருந்தார்.  அப்பொழுது அனைவருடைய முன்பாகவும் இயக்குனர் திடீரென்று அந்த நடிகைக்கு முத்தமிட்டார் . இதை எதிர்பார்க்காத அந்த நடிகை பதறிப்போனார். இதனை எடுத்து இந்த புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில், இதற்கு பதிலளித்த இயக்குநர் ஏ.எஸ்.ரவிக்குமார், “அவரை முத்தமிட்டதில் என்ன தவறு? எனது படத்தில் அவரது பணி எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் நன்றி தெரிவிக்கும் விதமாக அன்புடன் முத்தமிட்டேன்” என்று விளக்கமளித்துள்ளார்