தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற அ.ம.மு.க நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்:
“2006 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதுபோல் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் அரசியலுக்கு புதிய தாக்கத்தை தருவார் என நான் நம்புகிறேன். இது வெறுமனே மதிப்பீடு அல்ல. பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சர்வேக்கள், விஜயின் அரசியல் வருகை பல கட்சிகளுக்கும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என உறுதியாக கூறுகின்றன. ஆனால், இதனால் அவர் தனிப்பட்ட முறையில் கூட்டணிக்கு செல்வேன் என நீங்கள் நினைக்கவேண்டாம்,” என்றார்.
