சன் தொலைக்காட்சியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருப்பவர் தான் கண்மணி. இவர் சின்னத்திரை சீரியல் நடிகரான நவீனை காதல் திருமணம் செய்து கொண்டார். இப்போது கண்மணி கர்ப்பமாக உள்ளதாக 2 வாரங்களுக்கு முன் வீடியோ மூலம் அவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது கண்மணிக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்தை சொல்லி வருகிறார்கள்.