தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் சாகுந்தலம் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மேலும் குஷி என்ற திரைப்படத்திலும் அவர் நடிக்கிறார். அத்துடன் பாலிவுட்டில் உருவாகி வரும் சிடேட்டல் எனும் வெப் சீரிஸில் நடிக்கிறார்.

இதற்காக பாக்சிங் பயிற்சியெடுக்கும் வீடியோவை கூட அவர் தன் சமூகவலைதளபக்கத்தில் பதிவு செய்திருந்தார். அண்மை காலமாக தனது உடற்பயிற்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் சமந்தா, இப்போது குதிரை சவாரி பயிற்சி எடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)