தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவருடைய நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தை அடுத்து தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பல்வேறு நடிகர்கள் இணைந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியன்-2 படத்தில் கமலுக்கு வில்லனாக மொத்தம் 7 நடிகர்கள் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது, சமுத்திரகனி, குரு சோம சுந்தரம், பாபி சிம்மா, ஜெயப் பிரகாஷ், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகியோர் தான் அந்த 7 நடிகர்கள் என தெரியவந்துள்ளது. இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ஒருவருக்கு எதிராக இத்தனை வில்லனா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.