தற்போது தமிழ் சினிமாவில் இந்தியன்-2, லியோ, ஜெயிலர் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார் அனிருத். மேலும் தெலுங்கில் ஏற்கனவே சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் ஒரு பாடல் பின்னணி பாடியிருந்தார்.

இதையடுத்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30-வது படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார் அனிருத். இப்போது குஷி படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12-வது படத்திற்கு இசையமைக்கவும் அனிருத் ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தை நானி நடித்த ஜெர்சி எனும் படத்தை இயக்கிய கவுதம் தின்னனுரி இயக்குகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.