பிரபல நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது திரைப்படமாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் இன்று மாலை வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் அருண் விஜய் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் 52-வது படமாக உருவாகும் ‘இட்லி கடை’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, தனுஷ் எழுதி, பாடிய ‘எஞ்சாமி தந்தானே’ பாடலின் லிரிக் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
The super talented @arunvijayno1 as Ashwin #Idlikadai pic.twitter.com/eCFQ3ngn3A
— Dhanush (@dhanushkraja) September 6, 2025
படத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள், இன்று மாலை 6 மணி முதல் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தனுஷ் – அருண் விஜய் கூட்டணி, வில்லன் கதாபாத்திரம், இசை, மற்றும் தனுஷின் இயக்கம் என பல எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம், ரசிகர்களிடம் எப்படிப் பதிலளிக்கிறது என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறது திரையுலகம்.
